Art

உயர்வுகளின் வித்தகன் – நம்பிக்கையின் புத்திரனின் கதை

வார்த்தைகளும் வசனங்களும் பக்கம் பக்கமாக பேசிடாமல் ஆனாலும் தன் உடல்மொழியால், அசைவுகளால் உணர்வுகளை அச்சொட்டாகப் பிரதிபளித்து மற்றொருவரை தன்னோடு கட்டிப்போட்டு பயணிக்க வைக்க முடியும் என்ற ஒன்றை நிரூபித்தவர்தான் ரோவன் அட்கின்ஸன் (Rowan Atkinson) அதாவது மிஸ்டர் பீன். வாழ்வில் வீழ்ச்சிகளையும் தோல்விகளையும் சந்தித்த அவர் இன்றைக்கு பெயரைக் கேட்டாலே முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் ஒருவராக மாறியிருக்கின்றார். அவர் வாழ்வு கற்றுத்தரும் பாடம் மிகப்பெரியது. 

 

1955 ஆம் ஆண்டு  ஜனவரி   6 ஆம் திகதி  ஐக்கிய இராச்சியத்தில்  ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்கிறார் இந்த ரோவன். சிறுவயது முதலாகவே பிறரை மகிழ்விக்கும் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர். ஆனாலும் அவருக்கு இருந்த பேச்சுத் தடுமாற்றம் காரணமாக இளமைக்காலத்தில் அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தன்னைச் சுற்றிலும் நக்கலும், கேலிப் பேச்சுகளுக்கும் அதிக முகம் கொடுத்தார் அதனாலேயே தனிமையை அதிகம் நேசிப்பராகவும் இருந்தார்.

 

அதேபோல் மறுபக்கம் படிப்பின் மீது அதீத ஆர்வமும் கொண்டார். தன்னுடைய முழுக்கவனத்தையும் கல்வியின் பக்கம் திருப்பினார். அதனால் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் மேற்படிப்பையும் பயின்றார். எது எவ்வாறான போதிலும் அவருக்கு நடிப்பு மீது பெரும் ஈர்ப்பு இருந்தது. என்றாலும் அவருடைய பேச்சுத் திணறல் காரணமாக அனைத்து வாய்ப்புகளிலும் நிராகரிக்கப்பட்டார். அப்போது சினிமா என்றாலே உடலமைப்பு மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் ஆனால் ரோவனுக்கு அவ்வாறு இருக்கவில்லை. ஒரு பக்கம் பேச்சுத்திணறல் மறுபக்கம் உடலமைப்பு என்ற காரணங்கள் அவர் விரும்பிய துறைக்கு செல்வதில் சிக்கலை ஏற்படுத்தியது.

 

ஆனால் அவர் தன் நம்பிக்கையை விட்டுவிடவில்லை தொடர்ந்தும் முயன்றார் நாடகங்களை எழுத ஆரம்பித்தார். ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருக்கும் போது ஒரு நாடகம் எழுதி இயக்கி நடித்தார். அது பெரிதும் பாராட்டுகளைப் பெற்றது. பின்னர் ஒரு நகைச்சுவை குழுவிலும் இணைந்தார். ஆனால் அங்கு அவர் பெரிதாக பேசப்படவில்லை.  பிறகு அவரது நண்பர் ஒருவரின் மூலமாக பிபிசி யில் நிகழ்ச்சி ஒன்றிற்கான வாய்ப்பு கிடைத்தது. அட்டின்சன் பீபில் எனும் அந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகத் தொடங்கினார் ரோவன். அதற்கு பின்னரே அவர் மிஸ்டர் பீன் ஆக மாறும் காலம் உருவானது. 

 

படிப்படியாக தொலைக்காட்சியில் வாய்ப்புகள் கிடைக்க அவர் தனது கலைப்பயணத்தை ஆரம்பித்து சென்றார். 1987 கனடாவில் மிகப்பெரிய நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றிக்கான அழைப்பு ரோவனுக்கும் வந்து சேர்ந்தது. அதில் கலந்து கொள்ளச் சென்ற அவருக்கு மொழி ஒரு பிரச்சினையாக அமைந்தது. ஆரம்பம் முதலாகவே மொழிகளைக் கடந்து உடல் அசைவுகளாலும் சைகளாலும் பேசாது நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ரோவனுக்கு இருந்தது அன்றைக்கு அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டார். ஒரு வளர்ந்த குழந்தையின் சேட்டைகள், அன்றாட வாழ்வில் அந்தக் குழந்தை எதிர் கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கின்றது என்ற அடிப்படையில் உருவானதுதான் Mr. Bean தொடர். மிகச் சொற்பமான வசனங்கள் மாத்திரமே இதில் இருக்கும் ஆனால் உடல் அசைவுகளை கொண்டு தான் சொல்ல வந்தததை பார்வையாளர்களுக்கு அச்சு பிசகாமல் நகைச்சுவை கொட்டக் கொட்ட கொண்டு சேர்த்தார். 

 

1990 முதல் 1995 வரை மொத்தமாக 15 பகுதிகள் மாத்திரமே எடுக்கப்பட்டது இந்தத் தொடர். ஆனால் இன்றுவரை அதனையே திரும்பத் திரும்ப நாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல விருதுகளுக்கும் சொந்தக்காரர். பிபிசியிவல் இருக்கும் போது சுனேட்ரா சாஸ்ட்ரி என்பவரோடு திருமண பந்தத்தில் இணைந்தார். அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒருவராக  இவர் இருந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார் அது நண்பராக இருந்தாலும் சரி உறவினராக இருந்தாலும் சரி. 

 

தொடர்களில் குழந்தைத்தனமான ஒரு காரில் வலம் வரும் பீன் நிஜமாகவே கார் பிரியர். பெருமதிமிக்க கார்களை அவர் வாங்கி சேர்த்துள்ளார். தனது 57 ஆவது வயதில் “நான் இப்போது 50களை கடந்து விட்டேன் இனியும் குழந்தைத்தனமான விடயங்களை செய்வது மரியாதையை குறைக்கும் அதனால் நான் நடிப்பதை நிறுத்தி விடுகின்றேன்” என நடிப்புக்கு சற்றே ஓய்வையும் தந்துவிட்டார். சிறு வயது முதலாக எத்தனையோ அவமானங்களை கண்டும் கடந்தும் வந்த பீன் எப்போதும் தோல்விகளால் துவண்டு போகவில்லை. தனது கனவை விட்டுக் கொடுக்கவில்லை. எது தனக்கு வரவில்லையோ அதனையே கற்று சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் தேடலும் அவரை வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது. தன் சந்தோசம் எதில் உள்ளது என்பதை அறிந்து எப்போதும் அதனை விட்டுக் கொடுக்காமல் அனைவர் மனங்களிலும் நிறைந்து நிற்கின்றார் பீன் எனப்படும்  வளர்ந்த குழந்தை. 

Avatar

Author

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Art

Best Streaming Services 2023

It’s time to relax after a full day of work. you sit down in front of your TV wondering which
Art

2022 ආපු පට්ටම ටීවී සිරිස් 05

2022 අවුරුද්ද සිනමාව ට , ටීවී සීරිස් වලට ආදරය කරන අයට නම් අමතක නොවෙන ම අවුරුද්දක්. ලෝකේ වටෙන්ම සිනමාකරුවන්ගේ පට්ට

Subscription

Kasunii

This will close in 20 seconds